Tamil Nadu
நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழந்ததாக தகவல்!
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான யாஷிகா ஆனந்த் தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது அந்த கார் விபத்து கொள்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மகாபலிபுரம் அருகே நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே காவல்துறையினர் சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அவரது 2 நண்பர்களும் படுகாயமடைந்ததாகவும் தெரிகிறது. மேலும் யாஷிகாவின் நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் இந்த விபத்து நடந்த இடத்தை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
