நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு: போலீசார் அதிரடி!

4b25ada6a996ea6126ab4e8bb31bb89f-2

நேற்று நள்ளிரவு நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து தற்போது அவர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று தனது தோழி மற்றும் இரண்டு நண்பர்களுடன் மகாபலிபுரம் வழியாக சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது 

இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், யாஷிகாவும் அவரது 2 நண்பர்களும் படுகாயம் அடைந்ததை அடுத்து அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் அதிவேகமாக கார் ஓட்டி உயிர் இழப்பு ஏற்படுத்தியதாக மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் மீது வழக்கு தொடர வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment