நெருக்கமான காட்சிகள் காரணமாக பிரபல சீரியலில் இருந்து விலகும் நடிகை… ரசிகர்கள் அதிர்ச்சி….

சமீபகாலமாக வெள்ளித்திரை படங்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. காதல் ஆக்சன் காமெடி என படங்களுக்கு இணையாக சீரியலிலும் அத்தனை காட்சிகளும் இடம் பிடித்து வருகிறது. அதுபோக சீரியல் நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். நான்கு அண்ணன் தம்பிகளை வைத்து நகரும் இந்த கதைக்கு பல குடும்ப தலைவிகள் ரசிகைகளாக இருந்து வருகிறார்கள். இதில் இருக்கும் அனைத்து கேரக்டர்களுக்கும் தனித்தனியாக ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக கதிர் முல்லை என்ற ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முன்னதாக முல்லை கேரக்டரில் பிரபல நடிகை விஜே சித்ரா நடித்து வந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவருக்கு பதில் காவியா அறிவுமணி என்ற சின்னத்திரை நடிகை முல்லை கேரக்டரில் நடிக்க தொடங்கினார்.

சித்ராவிற்கு பின்னர் காவியாவை முல்லையாக மக்கள் ஏற்க சில காலம் தேவைப்பட்டது. தற்போது அனைவரும் இவரை முல்லையாக பார்க்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் காவியாவும் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் மற்றும் முல்லை கேரக்டர்களுக்கு இடையே அதிக ரொமானஸ் காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்று வருகிறது. இதன் காரணமாக நடிகை காவியா வீட்டினர் இந்த சீரியலில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். இதனால் விரைவில் இந்த சீரியலை விட்டு காவியா விலக உள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment