ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் அஜித்துக்கு ஜோடியாகும் நடிகை!

d8cdf4b31141165fd0a669b49b89b867

ஒரே நேரத்தில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தை அடுத்து அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

இந்த நேரத்தில் அஜித்தின் அடுத்த படத்தை எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் தீபிகா படுகோனே தான் நாயகி என்றும் இது கிட்டத்தட்ட முடிவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது 

போனிகபூருக்காக இந்த படத்தில் நடிக்க நடிகை தீபிகா படுகோனே ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் தென்னிந்தியாவில் ரஜினி மற்றும் அஜித் என்ற இரண்டு மஸ் நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தீபிகா படுகோனே பிரபாஸ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.