40 வயதிலும் மவுசு குறையாத நடிகை !! படத்தைவிட இதில் தான் வருமானம் ஜாஸ்தியாம்….
தென்னிந்திய சினிமாவில் 90 கிட்ஸ்ன் கனவு கன்னியாக வலம் வந்தவர் சினேகா. இவர் ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இதனை தொடர்ந்து ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்ப ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகா. தற்போது இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளன. இதன் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அதன் பிறகு சின்ன திரையில் நடுவராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சினேகாவை பார்த்த ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். இதனை பயன்படுத்திக்கொண்ட சினேகா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான காசு பார்க்கத் தொடங்கி விட்டார்.
அதுமட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் அதிகமாக கமிட் ஆகியும் வருகிறார். குறிப்பாக நகைக்கடை, துணிக்கடை திறப்பதற்கு இவங்கதான் முதல் சாய்ஸாக இருக்கிறாங்க.
அந்த வகையில் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் இவ்வளவு பணமா ? என்ற வகையில் கேட்குறாங்களாம். 40 வயதினை கடந்தும் சினேகாவிற்கு நல்ல மவுசு இருப்பது தான் இதற்கு காரணமாம்.
