அடடே! நடிகை திரிஷாவுக்கு காலில் காயம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 90-கிட்ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா தற்போது வரையில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகை திரிஷா ஓய்வு எடுப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார்.

trisha-2

அதன் ஒரு பகுதியாக இத்தாலி போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று பல்வேறு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

இந்த சூழலில் சுற்றுலாவின்போது காலில் காயம் ஏற்பட்டு, கட்டு போடப்பட்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Capture 2

அதோடு வெக்கேஷன் சென்றதற்குக் கிடைத்த பரிசு என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதன் காரணமாக பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.