தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான சில்க் ஸ்மிதா மறைந்து இன்றுடன் இருபத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
தமிழ் திரை உலகில் கடந்த 80களில் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் நடித்தவர் சில்க் ஸ்மிதா என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களே பொறாமை படும் அளவிற்கு அழகாக இருக்கும் அவர் கவர்ச்சியிலும் கலக்கி வந்தார் என்பதும் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சில்க்ஸ்மிதா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் பல பல்வேறு சோதனைகளை சந்தித்தார் என்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்றும் பாலியல் சீண்டல்கள் காரணமாக துக்கத்தில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் மறைந்து இன்றுடன் இருபத்தி ஆறு ஆண்டுகள் ஆன போதிலும் ரசிகர்கள் அவரை இன்னும் ஞாபகம் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.