
தமிழகம்
முன்னாள் அமைச்சர் மீது பாலியல் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
நடிகை சாந்தினி என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் ஒன்றை கடந்த ஆண்டு புகார் ஒன்றை கொடுத்தார்.
இந்த புகாரானது அடையாறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த அமைச்சர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நிலுவையில் இருந்தது.
இந்த சூழலில் தனக்கு எதிரான மனுவை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று அமலுக்கு வந்த போது நடிகை சாந்தினி தரப்பில் புகார் திரும்ப பெற்று கொள்வதாக கூறப்பட்டது.
இதனால் முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
