தென்னி்ந்திய சினிமாவிம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தின் பாடலானது பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா யசோதா படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி 2 வாரங்களுக்கு மேல் ஆக நிலையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
இந்நிலையில் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சமந்தா தன்னுடைய சோசியல் மீயா பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இத்தகைய செய்தியானது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் சமந்தாவிற்கு மீண்டும் உடல்நிலை மிகவும் மோசமானதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.