
பொழுதுபோக்கு
நடிகை சதா மிஸ் செய்த பிளாக் பஸ்டர் படம்.. என்ன படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல மெகாஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பல நடிகர்கள், நடிகைகள் தவறவிட்டது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பிறகு படம் பெரிய வெற்றியை பெற்றதும் ஐயோ இந்த படத்தில் நம்ம நடிக்கவில்லையே என்று வருத்தப்படுவதும் வழக்கமான ஒரு விஷயம் தான்.
தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை சதா அவர்கள். இவர், தமிழில் “ஜெயம்” திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக அந்நியன், அஜித்திற்கு ஜோடியாக திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்களை தொடர்ந்து சதாவிற்கு பெரிதாக பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கடைசியாக இவரது நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு டார்ச் லைட் என்ற படம் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இவருடன் வில்லனாக நடிக்க ஆசை.. அருண் விஜய் சொல்வது யாரை தெரியுமா?
