நடிகையாக இருந்த எம்எல்ஏ ரோஜா இன்று முதல் அமைச்சர்!! முதல்வரிடம் ஆசீர்வாதம்;

இன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான தினமாக காணப்பட்டது. ஏனென்றால் இன்று ஆந்திராவில் புதிய அமைச்சரவை உருவானது. அதன்படி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று உருவானது.

இதில் புதியதாக எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவி ஏற்கின்றனர். அதன்படி நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜாவுக்கு அமைச்சராக பதவி ஏற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நடந்தது.

ரோஜா உட்பட மொத்தம் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 2019 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இன் ஜெகன்மோகன் ரெட்டி. கடந்த வாரம் 24 அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 12 பேரும், புதியவர்கள் 13 பேரும் தற்போது புதிய அமைச்சரவையில் இடம் பெற்றனர். தலைமைச் செயலகத்தில் ஆளுநர் பிசுவ பூசன் அரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் நகரி தொகுதி எம்எல்ஏ போம் நடிகையுமான ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment