உச்சகட்ட பரபரப்பு.. பிரபல நடிகை சுட்டுக்கொலை!!

கொல்கத்தாவில் பிரபல நடிகை ரியா குமாரி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களை பொறுத்த வரையில் குற்றச்சம்பவங்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடன் வழிப்பறியில் ஈடுபடுவது அதிகரித்தி வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்று காலை கொல்கத்தாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேற்கு வங்க நெடுஞ்சாலையில் உள்ள பாக்னான் என்ற இடத்தில் காரை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளனர். அப்போது வந்த 3 மர்ம நபர்கள் கையில் துப்பாக்கி உடன் உள்ள பணம் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ரியா அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர் ஒருவர் நடிகை ரியாவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரியா இரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.