தேவர் மகன் பஞ்சவர்ணம் கதாபாத்திரம்.. ரேவதிக்கு அமைந்தது இப்படித்தான்..

தமிழ் சினிமாவின் ஐகானிக் படங்களில் ஒன்றான தேவர் மகன் திரைப்படம் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத படைப்பாகும். ஒரு ஊரில் ஒரே சமுதாயத்திற்குள் ஏற்படும் மோதலும், அதன்பின் உண்டாகும் மாற்றங்களும் பற்றி இயக்குநர் பரதனும், கமல்ஹாசனும் அருமையாகச் சொல்லியிருப்பார்கள்.

பெரியசாமித் தேவராக சிவாஜிகணேசனும், சக்திவேல் தேவராக கமல்ஹாசனும், மாயத் தேவராக நாசரும், பஞ்சவர்ணமாக ரேவதியும், பானுமதியாக கௌதமியும், இசக்கியாக வடிவேலுவும் கதபாத்திரங்கள் வாழ்ந்திருப்பார்கள். இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படங்களில் தேவர் மகனும் ஒன்று.

படம் விமர்சனரீதியாக சில சர்ச்சைகளைக் கிளப்பினாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. கேரளத்தின் பாரதிராஜா என அழைக்கப்படும் இயக்குநர் பரதன் இயக்கமும், கமல்ஹாசன் முதன்முதலில் சாப்ட்வேர் மூலம் எழுதிய திரைக்கதையும் படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்தன.

இனி உன்னை வச்சு நான் டைரக்சன் பண்ணல.. சிம்புவை தன் வழிக்கு வர வைத்த கே.எஸ்.ரவிக்குமார்..

இதில் பஞ்சவர்ணமாக நடித்த ரேவதிக்கு முதலில் இந்தப் படத்தில் கதாபாத்திரமே கிடையாதாம். ஆனால் முதலில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மீனா. சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் கால்ஷீட் பிரச்சனையால் அவர் படத்திலிருந்து விலகினார்.  திடீரென ரேவதியை கமல்ஹாசனும், இயக்குநர் பரதனும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் அப்போது பிரியதர்ஷன் இயக்கிய மலையாளப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார் ரேவதி.

தேவர் மகனில் இரண்டு நாட்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள, அதன்பின் பிரியதர்ஷனிடம் சொல்லி இரண்டு நாட்கள் தேவர் மகனில் நடித்துக் கொடுத்திருக்கிறார் ரேவதி. படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் வெகுளித் தனமாக இருக்கும். மேலும் இந்தப் படத்தில் இஞ்சி இடுப்பழகி பாடலில் முதல் சில வரிகள் ரேவதி தன் சொந்தக் குரலில் பாடியிருந்தாராம்.

அந்த நேரத்தில் பாலுமகேந்திராவின் மறுபடியும் திரைப்பட ஷுட்டிங்கில் கலந்து கொண்டிருந்ததால் முழுப்பாடலையும் பாட முடியாமல் போனது. ஆனால் அதன்பின் எஸ்.ஜானகியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியிருக்கின்றனர்.

இந்தப் பாடல் கேட்கும் போது சிடியில் ஜானகி-கமல் குரலும், படத்தைப் பார்க்கும் போது ரேவதியின் குரலும் ஒலித்திருக்கும். தேவர் மகன் பற்றி இன்னும் எத்தனையோ பல அரிய தகவல்கள் புதைந்திருக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews