நடிகை ராஷ்மிகா முதலிடம்: இன்ஸ்டாகிராமில் சாதனை!

95c411b15b9724abc0869e88940dfe13

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனாவை 1.9 கோடி பேர் தொடர்ந்து வருகின்றனர். பிரபல நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால் உள்பட முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இன்ஸ்டாகிராமில் 1.9 கோடி ஃபாலோயர்களை பெற்று அதிக ஃபாலோயர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடத்தை ராஷ்மிகா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா தமிழில் சமீபத்தில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் இதனை அடுத்து இன்னும் ஒரு சில திரைப்படங்களிலும் அவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்த வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

நேற்று தனுஷ் டுவிட்டரில் ஒரு கோடி ஃபாலோயர்களை பெற்று தென்னிந்திய நடிகர்களில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நடிகர் என்ற சாதனை செய்த நிலையில் இன்று 1.9 கோடி ஃபாலோயர்களை பெற்று இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை ராஷ்மிகா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.