தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் ‘ஏ சாமி ஏ சாமி’ என்ற பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது. தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகாவிற்கும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. சமீபத்தில் கூட மாலத்தீவில் புத்தாண்டை ஒன்றாக கொண்டாடி உள்ளதாக தெரிகிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் சாரில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.