தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் கொளதம் கார்த்திக் உடன் நடித்த என்னமோ ஏதோ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.
இப்படம் விமர்சனம் ரீதியில் பலவித கருத்துக்கள் பெற்றதையடுத்து தமிழ் சினிமாவில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனையடுத்து ஹச் வினோத் இயக்கத்தில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் பம்பர் ஹிட் கொடுத்தையடுத்து பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது. பின்னர் ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.
இந்த சூழலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபல நடிகர் ஜாக்கி பாக்னானியை காதலித்து வருவதாக பாலிவுட்டில் அவ்வப்போது கிசுகிசுக்கள் வர தொடங்கியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு இந்த காதல் ஜோடி சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதற்கிடையில் காதலன் பிறந்த நாளை முன்னிட்டு “சாண்டா எனக்கு வாழ்க்கைக்கான சிறந்த பரிசைக் கொடுத்தார், அது நீங்கள்தான்.. என காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CmlbesLNYvE/?utm_source=ig_embed&ig_rid=70357e1c-cd1b-49b9-823b-5b8ea0b966e4