நடிகை தூக்கிட்டு தற்கொலை… பிரபாகரனிடமிருந்து ஐ போன் மீட்பு!!

தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன 3 செல்போன்கள், 1 டேப் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவின்யூவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தீபாவின் செல்போன் காணமல் போய் இருப்பதால் அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக தீபாவின் சகோதரர் குற்றம்சாட்டியிருந்தார். அதன் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

அதன் பேரில் தற்போது காணாமல் போன 3 செல்போன்கள், 1 டேப் போலீசார் பிரபாகரனிடம் கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

மேலும், நடிகை தீபா தற்கொலை செய்த போது முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐ போன் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.