Connect with us

காதல் தோல்வியால் விரக்தி… நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை!!

succied

பொழுதுபோக்கு

காதல் தோல்வியால் விரக்தி… நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை!!

கடந்த சில நாட்களாகவே சினிமா திரைப்பட நாயகிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருகம்பாக்கத்தில் வசித்து வருபவர் 29-வயதான பவுலின். இவர் வாய்தா பட நாயகியாகவும், திரைப்பட துணை நடிகையாகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில் நேற்றை தினத்தில் மின்விசிறியில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் நடிகையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதில் நான் ஒருவரை காதலித்ததாகவும், அவர் எனது காதலை ஏற்க மறுத்தால் உலகத்தில் வாழ முடியவில்லை… வாழ விருப்பம் இல்லை என கூறியுள்ளார். எனது மரணத்திற்கும் யாரும் காரணமில்லை என ஜெசிகா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

மேலும், நடிகை ஜெசிகாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top