நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளை: முன்னாள் பணியாளர் சுபாஷ் கைது!!

நடிகை பார்வதி நாயர் வீட்டில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் பணியாளர் சுபாஷ் புதுகோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், நிமிர்ந்துநில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தற்போது வசித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் அவரது வீட்டில் கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்த பணியாளர் ஒருவர் 6 லட்சம் மதிப்புள்ள கை கடிகாரம், 3 லட்சம் மதிப்புள்ள கை கடிகாரம், 50 ஆயிரம் மதிப்புள்ள மடி கணினி மற்றும் செல்போன் ஆகியவைகள் திருடி சென்ற கடந்த மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே வீட்டின் பணியாளர் சுபாஷ் சந்திரபோஸ் ( வயது 30) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக பொய்யான தகவல் பரப்புதல், களங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது முன்னாள் பணியாளர் சுபாஷ் சந்திரபோஸை போலீசார் புதுக்கோட்டையில் வைத்து கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.