கொலை மிரட்டல்! நடிகை பார்வதி நாயர் பரபரப்பு புகார்..!!

சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் உள்ள விலையுயர்ந்த கை கடிகாரம், செல்போன், லேப்டாப் திருடப்பட்டதாக நடிகை பார்வதி நாயர் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் பேரில் அவரது வீட்டில் பணிபுரிந்த சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முதல் புகாரின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 2-வது முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி நடிகை பார்வதி நாயரை மிரட்டி வருவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதன் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ்சந்திரபோஸ் மீது கொலை மிரட்டல், பெண்னை மானபங்கம் படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தினை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டில் வேலை பார்க்கும் சுபாஷ்சந்திரபோஸ் 9 லட்சம் மதிப்புள்ள விலையுயந்த பொருட்களை திருடி விட்டதாக புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.