நதியா இவங்களோட பெயரா.. ஷரீனா – நதியாவாக மாறியது இப்படித்தான்.. தென் இந்திய சினிமாவை வசப்படுத்திய நடிகையின் சுவாரஸ்ய பின்னணி..

தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் நதியா. ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட தென் இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுக்குடன் இணைந்து நடித்துள்ள நதியா, ஏனோ கமல்ஹாசனுடன் மட்டும் ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என ஒரு ரவுண்டு வந்த நடிகை நதியா, கமலுடன் ஒரு சில திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் தான் வேறு படங்களுக்கு தேதி கொடுத்ததால் அவருடன் ஜோடி சேர முடியாமல் போனதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். முன்னதாக, திருமணத்திற்கு பிறகு, அதிகம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நதியா, சுமார் 10 வருட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவான எம். குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதன் பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார் நதியா. சமீபத்தில் வெளியான அண்டே சுந்தரனிக்கி, LGM உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நதியா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்ததாகவும் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க நதியா ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிகிறது. தான் நாயகியாக நடித்து வந்த போது எப்படி இருந்தாரோ, அதே போல தற்போது வரை இளமையுடன் அவர் இருப்பது பலருக்கும் புலப்படாத ரகசியம்.

மலையாளத்தின் பிரபல இயக்குனர் பாசில் தான் மலையாள திரைப்படத்தில் நதியாவை நாயகியாக அறிமுகமாக்கி இருந்தார். முதல் படத்திலேயே நதியாவுக்கு சிறந்த ஃபிலிம்பேர் விருதையும் வாங்கி கொடுக்க, மறுபக்கம் மிக அழகாக இருந்த நதியாவை தென் இந்திய சினிமாவும் அதிகம் கவனித்தது. தொடர்ந்து பூவே பூச்சூடவா என்ற படத்தின் தமிழ் சினிமாவில் நதியா அறிமுகமானார். இந்த படத்தையும் பாசில் தான் இயக்கி இருந்தார்.

இதன் பின்னர், தெலுங்கு சினிமாவிலும் நதியா என்ட்ரி கொடுக்க, அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு அமைந்து போனது. மிகவும் அழகாக, அதே வேளையில் நடிப்பிலும் தெரிந்திருந்ததால் ரசிகர்கள் அதிகம் பேரும் நதியாவை பின்பற்றி வந்தனர். இதனிடையே, நதியா என்ற பெயர் எப்படி உருவானது என்ற தகவலை காணலாம்.

இயக்குனர் பாசிலின் நண்பர் மகள் தான் நதியா. அவரை பார்த்ததுமே தனது திரைப்படத்தில் நாயகியாக்க வேண்டுமென முடிவு செய்த பாசில், நதியாவின் பெற்றோர் சம்மதத்துடன் அவரை சினிமாவில் அறிமுகம் செய்தார். இதற்கிடையே, நதியாவின் இயற்பெயரான ஷரீனா என்ற பெயரில் அந்த சமயத்தில் ஒரு பாலிவுட் நடிகை பிரபலமாக இருந்தார். மலையாள படங்களிலும் ஷரீனா நடித்து வந்ததால், அவரின் பெயரை மாற்ற பாசில் முடிவு செய்து என்ன பெயர் வைக்கலாம் என்றும் ஆலோசனை செய்துள்ளார்.

அப்போது தனது சகோதரர் நாசரின் மனைவி பெயரான நதியா, பொருத்தமாக இருக்கும் என பாசிலுக்கு தோன்றி உள்ளது. தொடர்ந்து, ஷரீனா என்ற பெயரை மாற்றி நதியா என பாசில் அறிமுகம் செய்ய, தென் இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாகவும் அவர் மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.