தமிழ் சினிமாவில் நடிகையும், மாடல் அழகியாக இருப்பவர் நடிகை மீரா மிதுன். கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடைபெறுவதற்காக திட்டமிடப்பட்டிருந்து. அப்போது தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக ரூ. 50 ஆயிரம் பணம் வாங்கி மோசடி செய்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மீரா மிதுனுக்கு எதிராக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் அமர்வுக்கு வந்தது. அப்போது காவல்துறையினர் தரப்பில் நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்த போதிலும் தற்போது வரையில் விசாரணைக்கு ஆஜராகமல் தலைமறைகாக இருப்பதால் அவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
காவல்துறையினர் கோரிக்கையை ஏற்ற நீதிபதி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.