நடிகை மீரா மிதுனை காணவில்லை… தாயார் போலீசில் புகார்..!!!

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்து பின்னர் நிபந்தனை ஜாமினில் மீரா மிதுனை விடுவித்தனர்.

குறிப்பாக தினமும் சென்னை காவல் ஆணையத்தில் கையெழுத்திட வேண்டும் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தலைமறைவானார்.

இது குறித்து நீதிமன்றத்தில் மீரா மிதுன் குறித்த தகவல் தெரியவில்லை என்றும் தொடர்ந்து அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்றுமாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுனின் தாய் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் தங்களது மகளை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறு புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், மகள் குறித்த தகவல் கிடைக்கும் பட்சத்தில் காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பதாக கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.