Connect with us

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது செய்ய உத்தரவு..! ஐகோர்ட் அதிரடி..

பொழுதுபோக்கு

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது செய்ய உத்தரவு..! ஐகோர்ட் அதிரடி..

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துடன் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன் நடித்துள்ள பேய்யை காணும் என்ற படத்தில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குரூப்பில் தயாரிப்பாளர் சுருளி வேல், இயக்குனர் மற்றும் தமிழக முதல்வர் குறித்து ஆபாசமான ஆடியோ பதிவிட்டு இருந்ததாக அந்த படத்தில் தயாரிப்பாளர் சுருளி வெல் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மீரா முதுனுக்கு எதிராக வழக்கு பதிவு  செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடிகை மீரா மிதுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் ஆடியோ பதிவிட்ட நாளில் துக்க நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் பொய்யாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஒவ்வோருவர் மீதும் அவதூறு பரப்புவது வாடிக்கையாக வைத்துள்ளார் என தெரிவித்தனர். தற்போது முதல்வர் குறித்து அவதூறு பரப்பபட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீரா மிதுனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டர். மேலும், சோசியல் மீடியாவில் அவர் அவதூறு பதிவிகளை நீக்கிமாறு கூறினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top