பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை மீரா மிதுனுக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து மீராமிதுன் தலைமறைவானார் என்பதும் அவரை காவல் துறையினர் கேரளாவில் வைத்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் ஜாமீன் கேட்டு இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது என்பதும் அவரது நண்பருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது