நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான மீராமிதுன் கேரளாவில் கைது செய்யப்பட்டார். கைது செய்வதற்கு முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
நடிகை மீரா மிதுன் சமீபத்தில் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் சம்மனுக்கு ஆஜராகாத மீரா மிதுன், கேரளாவில் பதுங்கி இருந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் கேரளா சென்ற தமிழ்நாடு போலீஸ் அவர் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரை தற்போது சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
இந்த கைதுக்கு முன் மீராமிதுன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னை காவல்துறையினர் டார்ச்சர் செய்வதாகவும், தன்னை கைது செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி அழுது கொண்டே கூறியுள்ள காட்சிகள் உள்ளன இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
பட்டியலின மக்களை அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுனை போலீசார் கைது செய்யும் போது அழுது, ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ !#MeeraMitun pic.twitter.com/gNkabS8IOi
— Raja Shanmugasundaram (@SRajaJourno) August 14, 2021