Connect with us

திரையுலகமே அதிர்ச்சி!! நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்….

meena 1

பொழுதுபோக்கு

திரையுலகமே அதிர்ச்சி!! நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மீனா. இவர் 90 கிட்ஸ்களில் கனவு கன்னியாக வலம்வந்தவர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இவருக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

இந்த சூழலில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவால் கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. தற்போது நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்தி சினிமா துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட உடன் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக கூறப்படுகிறது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இவரது மறைவிற்கு நடிகை மீனாவின் ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top