இந்த மாதிரி தான் கணவர் வேண்டும் என அடம்பிடித்த மீனா.. ஆனால் தலைவிதியால் மாறிப்போன கண்ணழகியின் வாழ்க்கை

1990-களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் குஷ்பு, ரேவதி, ராதா என கதாநாயகிகள் கலக்கிக் கொண்டிருக்க தனது காந்தக் கண்களால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு நடிப்பில் உச்சம் தொட்டவர்தான் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இவர் நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்னும் அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

தற்போது வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மீனா கடந்த 2009-ல் மென்பொருள் பொறியாளர் வித்யாசாகரை மணம் முடித்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து தாயைப் போலவே குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தார்.

ஆனால் துரதிர்ஷடவசமாக கடந்த 2022-ல் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோய் காரணமாக இளம் வயதிலேயே உயிரிழந்தார். இதனால் திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. மீனாவிற்கு ஆறுதல் சொல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே திரண்டு வந்தது. தற்போது கணவர் பிரிவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு இயல்பாக வாழ்ந்து வருகிறார்.

டி.எம்.எஸ் வேண்டா வெறுப்பாக பாடிய பாடல்.. அவரையே நடிக்க வைத்து ஹிட் கொடுத்த எம்.எஸ்.வி

இந்நிலையில் தனக்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளைதான் வேண்டும் என்று தன் தாயாரிடம் கேட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மீனா.  அவர் பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது தனக்கு இருந்த அளவில்லாத ஆசையைக் கூறியிருக்கிறார். மீனாவை பேட்டி எடுத்தவர் ரித்திக் ரோஷன் புகைப்படத்தைக் காட்டிய உடனே உணர்ச்சிவசப்பட்ட மீனா ரித்திக் ரோஷனைப் பற்றி பேசும் போது,

“எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அந்த போட்டோ எடுத்தப்போ என் இதயமே நொறுங்கிடுச்சு. அவருக்கு அன்று கல்யாணம். எனக்கு அப்போ கல்யாணம் ஆகல. என் அம்மா கிட்ட கூட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்கம்மான்னு சொன்னேன்” என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். நடிகை மீனா ரித்திக் ரோஷன் மாதிரி ஆளை திருமணம் செய்ய ஆசைப் பட்டதாகக் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.