நடிகை குஷ்பு வீட்டில் திடீர் மரணம்!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பு. தற்போழுது படங்கள் நடிப்பதியிலும் படங்கள் தயாரிப்பதிலும் அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

பிசியாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் குஷ்பு சமீபத்தில் 2 தினங்களுக்கு முன் சமூக வலை தலங்களான டுவிட்டர் பக்கத்தில் தனது முத்த சகோதரர் அபுபக்கர் உடல் நிலை குறைவின் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தெரிவித்தார். அனைவரின் பிரார்த்தனை வேண்டும் என வலியுறுத்தினார்.

திருச்சியில் ஜன.2-ம் தேதி விடுமுறை அறிவிப்பு!!

குஷ்புவின் முத்த சகோதரர் உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.வெண்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை நடைபெற்றது.

தற்போழுது அவரது சகோதரர் உயிரிழந்ததாக குஷ்பு அறிவித்துள்ளார். என் சகோதரர் பயணம் இன்று முடிந்தது அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்பொழுதும் எங்களுடன் இருக்கும்.அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது ஆத்துமா சாந்தி அடையவும் பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.