“இவங்க ஜோசப் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டாங்க..“ வைரலாகும் நடிகை கஸ்தூரியின் பேச்சு

அவ்வப்போது தனது பரபரப்புக் கருத்துக்களால் இணைய உலகை சூடாக்கி வைரலாக்கி வருபவர் நடிகை கஸ்தூரி. கஸ்தூரி ராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே படம் மூலம் தமிழ்சினிமாவில் அடியடுத்து வைத்தார். முன்னாள் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவரான கஸ்தூரி படிப்பிலும் சிறந்து விளங்குபவர். இதனால் இயற்கையாகவே இவரிடம் சமூகக் கருத்துக்கள் பல வெளிப்படும். தொடர்ந்து தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வந்தவர் திடீரென்று சில ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் தமிழ்ப்படம் படத்தில் குத்துவிளக்கு பாடலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்து தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் மற்றும் அவரின் அரசியல் பிரவேசம் குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “

சினிமா ரசிகர்களாக இருப்பவர்கள் ஒட்டு மொத்தமாக ஓட்டு போட்டிருந்தால் இந்நேரம் விஜயகாந்த் முதல்வர் ஆகியிருப்பார். கமல்ஹாசன் எம்எல்ஏவாகியிருப்பார். ஆனால் அதெல்லாம் நடக்கவில்லையே. மாதம் 1000 ரூபாயை கொடுத்துவிட்டு 10000 ரூபாய்க்கு தலையில் சுமையை ஏற்றி வைத்துள்ளார்கள். ஆகையால் அடுத்து நமக்கு என்ன விடிவு கிடைக்கப் போகிறது? நமக்கு உண்மையான ஒரு அரசை கொடுக்க தகுதியானவர் யார் என மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் விஜய் எந்த இடத்தில் ஃபிட் ஆகிறார் என்பதை அவரே இன்னும் சொல்லவில்லை.

இந்தப் படத்துல ரஜினி நடிச்சிருந்தா எப்படி இருக்கும்? தட்டித் தூக்கி ஹிட் கொடுத்த கேப்டன்..!

விஜய்யின் அறிக்கைப்படி பாதிப்பு இல்லாத ஒரே கட்சி என்றால் பாஜகதான். காவிக் கொள்கை உள்ளவர்கள் பாஜகவுக்குதான் ஓட்டு போடுவார்கள். கண்டிப்பாக ஜோசப் விஜய்க்கு ஓட்டுபோட மாட்டார்கள். ஆகையால் விஜய்க்கு சிறுபான்மையினர்தான் ஸ்ட்ராங்காக உள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சிறுபான்மையினர் ஓட்டு திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குதான் அதிகம் உள்ளது. விஜய், காங்கிரஸ் கட்சியைதான் கபளீகரம் செய்யப்போகிறார். அந்த கூட்டணியைதான் விஜய் கபளீகரம் செய்யப்போகிறார். அவர்கள்தான் சமூகநீதி பேசும் கூட்டணி. அங்குதான் விஜய் கை வைக்கிறார். அண்ணா, எம்.ஜி.ஆர் போல் திண்ணையில் படுத்து கஷ்டப்பட்டு ஆரம்பித்த கட்சி போல் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கிடையாது என்பதால் இவரைப் பார்த்து வளர்ந்தவர்கள் ஆதரவே அதிகம் கிடைக்கும்“ என்று அந்தப் பேட்டியில் கஸ்தூரி தெரிவித்துள்ளார். தற்போது இவரின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.