7 ஆண்டுகளுக்கு சினேகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கன்னிகா ரவி!

05075e0e648c77abbe9b0ada6a61544c

பாடலாசிரியர் சினேகனின் மனைவி கன்னிகா ரவி ஏழு ஆண்டுகளுக்கு முன் சினேகனை காதலிக்கும் போது எடுத்த புகைப்படத்தை தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த திருமணத்தில் பாரதிராஜா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு சினேகன் – கன்னிகா ரவி தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனக்கு திருமண வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட கன்னிகா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைவரையும் அழைக்க வில்லை என்றும் அதனால் கோபப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் சினேகனை முதன் முதலாக சந்தித்த கடந்த 2014 ஆம் ஆண்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள கன்னிகா, எனது முதல் காதல் திருமணத்திற்கு பின்னும் தொடர்கிறது என்று பதிவு செய்துள்ளார். கன்னிகா ரவி பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.