90 கிட்ஸ் காலக்கட்டத்தில் தொடங்கி இன்று முதல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் அஜித். இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான படம் ‘வலிமை’.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘ஏகே61’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
அதே சமயம் அஜித் பைக் ஓட்டுவதில் வல்லவர் என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. அதன் படி, தற்போது இமயமலையில் பைக் சாகசம் செய்யும் நடிகர் அஜித்துடன் பிரபல நடிகை மஞ்சுவாரியார் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதோடு எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு நன்றிகள் தெரிவிப்பதாகவும், எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியாவில் இணைவதில் பெருமை அடைவதாக கூறியுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.