Connect with us

மோசடி மன்னன் சுகேஷ் வழக்கு! நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறையில் ஆஜர்…

Jacqueline

பொழுதுபோக்கு

மோசடி மன்னன் சுகேஷ் வழக்கு! நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறையில் ஆஜர்…

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் குறித்த விசாரணைக்காக பாலிவுட் நடிகை ஜாக்குலின் மீண்டும் அமலாக்கத்துறையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் பிரிந்து சென்ற நிலையில் இரட்டை இலை சின்னம் பெற்றுத்தருவதாக கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர்.

இவர் மருத்துவ துறையை சேர்ந்த ஃபோர்ட்டிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மனைவி அதிதி சிங்-யிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் சிக்கி தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், குறிப்பாக பணமோசடியில் ஜாக்குலினும் தொடர்பு உண்டு என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை 7,7 கோடியை முடக்கியது. இதனிடையே இது தொடர்பான விசாரணையில் 3 முறை அமலாக்க துறையில் ஜாக்குலின் ஆஜரான நிலையில் மீண்டும் இன்று ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதன் படி, இன்று அவரிடம் நடத்திய விசாரணையில் சுகேஷ் அளித்த விலையுயர்ந்த பொருட்கள் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top