தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் மாடல் அழகியாக இருந்து திரைத்துறையில் ஹீரோயினாக கால் பதித்தவர் நடிகை திவ்ய பாரதி.
இவர் நடிப்பில் உருவான பேச்சுலர் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதோடு மார்டன் உடையில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர் பட்டாளங்களே உள்ளனர்.
அதே சமயம் அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகியுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் தன்னுடைய உருவ அமைப்பை வைத்து பலர் கேலி செய்வதாக கூறியுள்ளார்.
அதன் படி, “பேண்டா பாட்டில்” என பாடி ஷேமிங் என பலர் பதிவிடுவதாகவும், இதுபோன்ற பதிவுகள் கல்லூரி காலங்களில் இயல்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் பலரும் தன்னை ஊக்குவித்து கருத்துக்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இவருடைய பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.