
பொழுதுபோக்கு
நடிகை சித்ரா வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது சித்ராவின் தந்தை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். அதில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாகவும், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தற்போது இந்த வழக்கின் அமர்வானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேம்நாத் தரப்பில் குடும்ப செலவிற்காக சித்ராவை மட்டுமே அவர்களுடைய பெற்றோர்கள் நம்பியிருந்ததாகவும் கூறப்பட்டது.
அதேபோல் தங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் வரதட்சிணை ஏதும் கேட்கவில்லை என்றும் சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு நான் காரணமில்லை என ஹேம்நாத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட இருப்பதாகவும் இருப்பினும் உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை முன் வைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகைக்கு போதிய ஆதாரம் இருப்பதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
