சாமியாராக மாறிப் போன பிரபல நடிகை.. 50-ஐ கடந்தும் திருமணம் முடிக்காமல் ஆன்மீகத்தில் இறங்கிய காரணம்!

சினிமாத் துறையில் அடியெடுத்து விட்டாலே  நடிகைகளுக்கு வயதாவதே தெரிவதில்லை. பல நடிகைகள் திருமண வயதைக் கடந்தும் திருமணம் முடிக்காமலேயே இன்னும் நடித்துக் கொண்டிருக்கின்றர். ஹீரோயினாக நடிப்பவர்கள் திருமணம் முடித்தால் எங்கே தங்களது மார்க்கெட் போய் விடுமோ என்ற பயத்தில் இன்னும் திருமணம் முடிக்காமல் இளம்ஹீரோயின்களுக்கே சவால் விடுக்கின்றனர். ஆனால் 80-90 களின் நாயகி ஒருவர் 50 வயதைக் கடந்த பின்னும் இன்னும் மணம் முடிக்காமல் ஆன்மீகத்தின்பால் தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிக்கிறார்.

அவர்தான் நடிகை சித்தாரா. இயக்குநர் விக்ரமன் இயக்கிய புது வசந்தம் படத்தின் மூலம் பெரிய அளவில் புகழ் பெற்றவர். இவர் 1986 ஆம் ஆண்டு காவிரி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் கே. பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள்,  புரியாத புதிர் என்று பல திரைப்படங்களிலும் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தாஇருந்தார்.

புது வசந்தம் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் இவருடைய ஹோம்லியான முகம் அன்றைய இளைஞர்களின் ஃபேவரட் ஆகி இருந்தது. அந்த நேரத்தில் பெண் பார்க்கும்போது கூட நடிகை சித்தாரா மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னவர்களும் ஏராளம்.

குடிபோதையில் உளறிய கண்ணதாசன்.. அதையும் மெட்டுப்போட்டு ஹிட் ஆக்கிய எம்.எஸ்.வி.

இந்த நிலையில் இவர் கதாநாயகியாக நடித்ததைத் தொடர்ந்து தற்போது ரீ எண்ட்ரி கொடுத்து அக்கா, அம்மா, என்று பல கேரக்டரில் தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.  ஆனாலும் இவர் திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகத்தான் வசித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகை சித்தாரா ஆரம்ப காலகட்டத்திலேயே கவர்ச்சியை ஒதுக்கி ஹோமிலியாகவே தொடர்ச்சியாக நடித்து வந்ததாலே இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் இவருக்கு கேரளாவில் உள்ள ஒரு சாமியார் மீது இவருக்கு அதிக பக்தி வந்திருக்கிறது. அதனாலேயே இவரும் ஒரு பெண் சாமியாராக மாறிவிட்டதாக சித்தாரா பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இதனால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினாலும் இவர் காலத்தில் ஒருவரை காதலித்ததாகவும் அந்தக் காதல் கை கூடததால் தான் திருமணம் வேண்டாம் என ஒதுங்கி தனியாக வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.