அந்தத் தவறை மட்டும் செய்யவே மாட்டேன்-நடிகை சார்மி!

df22b6f9f9d012ba3e90ef6a8e22e399

முன்னொரு காலத்தில் இருந்த நடிகைகள் பலர் தற்போது சினிமா துறையில் இல்லை என்றே கூறலாம். மேலும் பல நடிகைகள்  வாய்ப்புகள் இன்றி பின்னடைவை சந்தித்ததோடு மட்டுமின்றி பலரும் திருமணம் ஆனதற்கு பின் சினிமா துறையை விட்டு பின்வாங்குகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்து தற்போது தயாரிப்புத் துறையில் ஆர்வம் காட்டிக் கொண்டு வருகிறார் நடிகை சார்மி. மேலும் இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.572ed2936cca7bd7fd1c682b3651137f

மேலும் இத்திரைப்படத்தில் இவர் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் மக்கள் மத்தியில் பெற்று கொடுத்தது. அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் மும்முரம் காட்டி அங்கு பல்வேறு பெயர்களை மக்கள் மனதில் பெற்றார். நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகிய 10என்றதுக்குள்ள என்ற திரைப்படத்திலும் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தற்போது அவர் நடிப்பதை விட தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  சில நாட்களாக இவருக்கு திருமணம் ஆக உள்ளதாக வதந்தி பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது நடிகை சார்மி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அதன்படி அவர் தன் வாழ்நாளில் திருமணம் என்னும் தவறை செய்யவே மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இவர் தற்போது தனது வாழ்நாளில் முக்கியமான இடத்தில் தற்போது இருப்பதால் திருமணம் எனும் தவறை தன் வாழ்நாளில் செய்யவே மாட்டேன் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை சார்மி. இதனால் திருமணம் பற்றிய பேச்சு வார்த்தை தற்போது தடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.