Entertainment
நடிகை பானுப்ரியா மீது புகார்
90களின் முன்னணி கதாநாயகி பானுப்ரியா. கோபுர வாசலிலே, பிரம்மா, புது மனிதன், பாடும் பறவைகள், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கட்டளை உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார்.

தற்போதைய காலக்கட்டத்தில் சீரியல்கள், அம்மா, அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார் பானுப்ரியா.
இவர் மீது காவல்துறையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் தனது வீட்டில் வேலை பார்க்கும் 14 வயது சிறுமிக்கு சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரியில் உள்ள சமால்கோட் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக பெண் ஒருவர் நடிகை பானுப்ரியா மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில் தனது “14 வயது மகளை நடிகை பானுப்ரியா சென்னையில் உள்ள தன் வீட்டில் குழந்தைத் தொழிலாளியாக வைத்திருக்கிறார். சம்பளம்கூட கொடுப்பதில்லை.
அது மட்டுமின்றி குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்தி வருகிறார்.” என்று அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், தன் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது பார்க்கவிடாமல் தடுத்து விரட்டிவிட்டதாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார்.
தனது 14 வயது மகளை பானுப்ரியா அவரது வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக பிரபாவதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை பானுப்பிரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
