நடிகை ஆலியா பட்டிற்கு பெண் குழந்தை! ரசிகர்கள் வாழ்த்து..!!

பாலிவுட் சினிமாவை பொறுத்த வரையில் கடந்த 5 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தவர்கள் ஆலியா பட்- நடிகர் ரன்பிர் கபூர்.

இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த 2 மாதத்தில் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.

இத்தகைய பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆலியா பட்க்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதே சமயம் திருமணம் நடைப்பெற்ற 2 மாதத்தில் வயிறு இவ்வளவு பெரிதாக இருக்காது என்று கமண்ட் செய்து வந்தனர்.

இதற்கிடையில் இன்று அதிகாலையில் வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக மும்பையில் இருக்கும் ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது ஆலியாபட்க்கு அழகான பெண்குழந்தை பிறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய தகவல்களை கேட்ட ரசிகர்கள் பலரும் ஆலியா பட் மற்றும் ரன்பிர் கபூருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.