நந்தினியா? ராணியா? பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்!!

தமிழ் சினிமாவிலேயே பிரபல இயக்குனர் என்று அழைக்கப்படுபவராக திகழ்ந்து கொண்டு வருகிறார் இயக்குனர் மணிரத்தினம். இவரது திரைப்படம் அமைதலாக இருந்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும்.

இத்தகைய இயக்குனர் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டு வந்துள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

Ponniyin selvan

மேலும் இது தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய கதையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ponniyinselvan

அதன்படி நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளம் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலோடு பட வெளியீட்டுக்காக காத்துக் கொண்டுள்ளனர்.

https://www.instagram.com/p/CfqUOoBBLi9/?utm_source=ig_web_copy_link

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews