அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக இயக்குனர் வினோத் கூறியுள்ள நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு சில நடிகர்கள் விலகி உள்ளதால் மீண்டும் சில காட்சிகள் படமாக்க வேண்டிய நிலை உள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
’வலிமை’ படத்தில் சில சீனியர் நடிகர்களை தான் நடிக்க வைத்ததாகவும் ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிக்க வரவில்லை என்றும் தாங்கள் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து உள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் நடித்த காட்சிகள் வேறு நடிகர்களை வைத்து படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார்
அதுமட்டுமின்றி ஏற்கனவே படமாக்கிய லொகேஷனில் மீண்டும் படமாக்க தற்போது அனுமதி கிடைக்கவில்லை என்றும் அதனால் அந்த காட்சிகளையும் மீண்டும் படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அந்த பேட்டியில் வினோத் தெரிவித்துள்ளார்
அஜீத், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் போனிகபூர் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.