21 ஆண்டுகளுக்குப் பின் சினிமா ஸ்டுடியோவில் நடந்த அதிசயம்… ஆரத் தழுவிய சூப்பர் ஸ்டார், உலக நாயகன்!

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்குப் பின் தமிழ் சினிமாவை வேறொரு தளத்தில் எடுத்துச் சென்றவர்கள் இரு ஜாம்பவான்கள் ஒருவர் உலக நாயகன் கமல்ஹாசன், மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்களுக்குப் பின் வந்த விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு போன்றோரும் தொடர்ந்து ஜொலித்தாலும் இவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. நிரப்புவும் முடியாது என்பதே உண்மை.

திரையில் இவர்கள் செய்யாத சாதனைகளே இல்லை என்னும் அளவிற்கு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். தொழிலில் தான் ரஜினி-கமல் போட்டி என்றாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள். கமல் சிறுவயதிலிருந்தே நடிக்க வந்தவர். ஆனாலும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் கே. பாலச்சந்தர். அதேபோல் ரஜினியையும் திரையில் அறிமுகப்படுத்தியவர் கே. பாலச்சந்தர்.

1975 களில் இவர்கள் இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், தில்லுமுல்லு, மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம் போன்ற படங்களில் இருவரும் ஒன்றாக நடித்து சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டினர்.

பின்னர் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து இன்றுவரை அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் நடிக்கும் படத்தின் ஷுட்டிங் பணிகள் ஒரே ஸ்டுடியோவில் நடப்பதால் அண்மையில் இருவரும் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துள்ளனர்.

இந்தாம்மா கருவாட்டுக் கூடை.. முன்னால போ…! கிரியேட்டிவ்-ன் உச்சம் தொட்ட பாடல்

அதவாது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் நடிக்கும் படத்தின் ஷுட்டிங் பணிகள் ஒரே ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. கமலுக்கு ஷங்கரின் இந்தியன் 2 பணிகளும், ரஜினிக்கு ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலின் தலைவர் 170 பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்த இருவரும் ஆரத் தழுவிக் கொண்டனர். மேலும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

வெகு நாட்களுக்குப் பின் இவர்கள் இருவரும் ஒரே ஸ்டுடியோவில் சந்தித்திருக்கும் புகைப்படங்களை இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது.

திரையில் பல வருடங்களுக்கு முன் ஒன்றாக நடித்தவர்கள் தற்போது மீண்டும் அதே போன்று ஒரு நிகழ்வில் சந்தித்திருப்பதால் இருவரது ரசிகர்களும் மாறி மாறி சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.