Entertainment
ஒரு நடிகர் கூட டுவிட்டர் ஹேஷ்டேக்கில் கலந்து கொள்ளவில்லை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்றும், 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள் என்றும், எனவே உடனடியாக திரையரங்குகள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது
இருப்பினும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் திறந்தவெளி திரையரங்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் திறந்தவெளிக் திரையரங்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இரண்டு ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டேக்கில் போனிகபூர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டரில் பதிவு செய்தனர் மேலும் திரையரங்குகளை விரைவில் திறக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்
ஆனால் இந்த ஹேஷ்டேக்குகளை ஒரு நடிகர்கள் கூடவே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளினால் புகழ்பெற்ற நடிகர்கள் திரையரங்குகள் திறப்பதற்கு குரல் கொடுக்காமல் மௌனமாக இருப்பது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
