கலக்கிய கவுண்டமணி, செந்தில்.. கைகொடுத்த பிரபு.. ரூட்டை மாற்றி ஜெயித்த விவேக்..

தமிழ்சினிமாவில் இன்று காமெடி நடிகர்களுக்கு மிகப்பெரிய பஞ்சமே ஏற்பட்டிருக்கிறது. என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, நாகேஷ், மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, விவேக், வடிவேலு, சந்தானம், சூரி இவர்களுக்கு அடுத்து சொல்லிக்கொள்ளும் அளவிற்கு காமெடி நடிகர்கள் என்பதே கிடையாது.

இவற்றில் நடிகர் விவேக் முன்னனி காமெடி நடிகரானது எப்படி தெரியுமா? 1990-களின் ஆரம்பத்தில் கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோரின் காமெடியே உச்சத்தில் இருந்தது. இந்த தருணத்தில்தான் நடிகர் விவேக்குக்கு கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது. தான் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தின் கதை விவாதத்தில் விவேக்கை பங்கேற்கச் செய்து அவரின் திறமையை அறிந்து அந்தப் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தினார்.

அந்த தருணத்தில்தான் சார்லி, சின்னிஜெயந்த் போன்றோரும் அறிமுகமாகி வளர்ந்து கொண்டிருந்தனர். விவேக் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், வாலி போன்ற படங்களில் முன்னனி காமெடியான நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தானும் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி பட வாய்ப்பு வந்திருக்கிறது.

இன்னும் சில காட்சிகள் கேட்ட இளையராஜா.. எடுத்துக் கொடுத்த கஸ்தூரிராஜா.. உருவான சூப்பர்ஹிட் சோகப் பாடல்

அப்படத்தில் ஹீரோவாக நடித்த பிரபு காமெடிக்கு விவேக்கை நடிக்க வையுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்படி படம் முழுக்க ஷுட்டிங் எடுக்கப்பட்டு விட்டது. பின்பு முழுப் படத்தையும் பார்த்த விவேக் அந்தப் படம் சாதி ரீதியிலான படம் என்பதால் மூட நம்பிக்கைகளைக் களையும் நோக்கில் கருத்துச் சொல்லாம் என்று எண்ணி காமெடி வசனங்களை எழுதி நடித்தார்.

அப்படத்தின் எடிட்டிங் மற்றும் டப்பிங்கின் போது இந்தக் காட்சிகளைப் பார்த்து யாருக்கும் சிரிப்பு வரவில்லையாம். ஆனால் அதன்பின்னரே அதன் அர்த்தங்களை உணர்ந்து கொண்டனராம். குறிப்பாக மைல்கல்லை கடவுள் என்று கும்பிடுவது, தொடையில் பல்லி விழுந்தால் கடையை அடைப்பது போன்ற மூடநம்பிக்கைகளை களையும் நோக்கில் அதை காமெடியாகச் சொன்ன விதம்அனைவரையும் கவர்ந்தது. மேலும் விவேக் பேசிய பிரபல வசனமான உங்களை 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா என்ற வசனமும் மிக பாப்புலர் ஆக தொடர்ந்து விவேக் இதேபோன்று சமூகக் கருத்துள்ள படங்களில் நடித்து சின்னக் கலைவாணர் என்ற பெயரையும் பெற்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...