
பொழுதுபோக்கு
சூரியிடம் மோசடி..நடிகர் விஷ்ணு விஷாலிடம் விசாரணை!!
நிலம் மோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷால் அவரது தந்தை ரமேஷ் கிரிபாலா ஆகியோரிடம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடுத்ததாக நடிகர் சூரியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நகைச்சுவை நடிகர் சூரி இடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்ட வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் கிரிபாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நடிகர் சூரி மூன்று முறை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த சூழலில் வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் விஷ்ணு விஷால் அவரது தந்தை ரமேஷ் ஆகியோருக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனை ஏற்று இருவரும் சென்னை காவல் ஆணையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். நீண்ட நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்கள் மீது எந்தவித குற்றமும் இல்லை என விளக்கம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், அடுத்ததாக நடிகர் சூரியிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
