சமீபகாலமாக திரை பிரபலங்கள் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக அமைகிறது.
அந்த வகையில் கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என சினிமா பிரபலங்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலியே ஏற்பட்ட உள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது மேனேஜர் சூர்யநாராயணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தகைய தகவலால் அவருடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.