
பொழுதுபோக்கு
நடிகர் விக்ரம் உடல்நிலை : மருத்துவமனை அறிக்கை!
சமீபகாலமாக திரை பிரபலங்கள் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக அமைகிறது. அந்த வகையில் டி ராஜேந்திரனை தொடர்ந்து தற்போழுது அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது விக்ரமுக்கு லேசான நெஞ்சுவலியே ஏற்பட்ட உள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவரது மேனேஜர் சூர்யநாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பது ;
”நெஞ்சு வலி காரணமாக நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவ குழு உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருக்கு மாரடைப்பு இல்லை, தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரை இயக்கம் இயக்குநர் விக்னேஷ் சிவன்!
