தொடர் படப்பிடிப்பில் இருந்துவரும் நடிகர் விக்ரமுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் காதல் சடுகுடு, தூள், பிதாமகன், கந்தசாமி இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் விக்ரம்.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக அவருடைய ரசிகர்கள் பூரண குணமடைந்து விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.