நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் புதிய உத்தரவு..!!

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான படம் ‘உப்பெனா’ . இந்த படத்தில் தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை படத்தின் வில்லன் விஜய் சேதுபதியின் ப்ரொடக்ஷன் வாங்கியதாக தகவல் வெளியாகியிருந்தது.

அடடே! ஆரம்பமே அதகளமா இருக்கே? ‘தளபதி 67’ படத்தின் மாஸ் அப்டேட்!!

இந்நிலையில் தன்னுடைய உலகமகன் என்ற படத்தின் கதையை திருடி உப்பெனா திரைப்படம் உருவாக்கப்பட்டதால், படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் 50% தமக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழில் படத்தை தயாரிக்க தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் டல்ஹவுசி பிரபு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது விஜய்சேதுபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை எனவும் இதற்கான எந்தவொரு ஆதாரங்களும் மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

தனுஷின் ‘வாத்தி’படத்தின் மாஸ் அப்டேட்… கொண்டாடும் ரசிகர்கள்..!!!

இந்நிலையில் மனுதாரர் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.