ரெண்டு வருஷத்துக்கு ஒரு கல்யாணமா? கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா

சினிமாக்களைப் பொறுத்தவரை ஒரே ஜோடி தொடர்ச்சியாக இரண்டு மூன்று படங்கள் நடித்துவிட்டாலே போதும் பத்திரிக்கைகளுக்கு அல்வா சாப்பிடுவது போல் கிடைக்கும் செய்திதான் கிசு கிசுக்கள். அந்த நடிகருடன் காதல், இந்த நடிகருடன் உறவு என ஏகத்துக்கும் ஒரு பிரபலத்தை வைத்து வறுத்தெடுப்பார்கள். ஆனாலும் சில நேரங்களில் இதை மெய்ப்பிப்பது போல பிரபலங்கள் பலர் தங்களது சொந்த வாழ்விலும் இணைந்துள்ளனர்.

தற்போது மீடியாக்களுக்கு ஹாட் நியூஸ் ஆக வந்திருக்கும் ஜோடிதான் விஜய்தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா சினிமா பிரபலங்கள். தெலுங்கு சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் இவ்விரு பிரபலங்களும் கீதா கோவிந்தம், டியர் கம்ரேட் போன்ற படங்களில் நடித்தனர். மேலும் தமிழில் விஜய் தேவரகொண்டா நோட்டா படத்திலும் நடித்தார். இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்யா வர்மா திரைப்படம்.

படம் ஓடாதுன்னு சொன்ன கேப்டன் விஜயகாந்த்..ஆனாலும் மைல்கல்லாய் அமைந்த சின்னக் கவுண்டர்

இந்நிலையில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய இவ்விரு படங்களிலும் இவர்களது காதல் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டதால் நிஜ வாழ்விலும் கிசுகிசுக்களில் சிக்க ஆரம்பித்தனர். பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடக்கப் போகிறது என்றும் செய்திகள் வலம் வந்தன. தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் தேவரகொண்டா விளக்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் நான் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவோ, அல்லது திருமணம் செய்து கொள்ளவோ இல்லை, ஊடகங்கள் தான் எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்தியை நான் கேட்டு வருகிறேன். அவர்கள் என்னை கையோடு கைபிடித்து திருமணம் செய்து வைக்கும் முனைப்பில் இருக்கிறார்கள்.

மேலும் பிப்ரவரி மாதம் நான் ராஷ்மிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தன்னையும், ராஷ்மிகாவையும் இணைத்து வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் நடிப்பில் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்த பேமிலி ஸ்டார் படம் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.